உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / துப்பாக்கியுடன் 2 பேர் கைது; கல்வராயன்மலையில் பரபரப்பு

துப்பாக்கியுடன் 2 பேர் கைது; கல்வராயன்மலையில் பரபரப்பு

கச்சிராயபாளையம்; கல்வராயன்மலையில் நாட்டுத்துப்பாக்கி மற்றும் சாராயம் பதுக்கி வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.கச்சிராயபாளையம் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார், நேற்று காலை கல்வராயன்மலையில் ரோந்து சென்றனர். அப்போது, தெற்குபட்டி கிராமத்தில் கோவிந்தன்,48; என்பவரின் மரவள்ளி வயலில், சாராயம் காய்ச்ச 4 மூட்டைகளில் 120 கிலோ நாட்டுச்சர்க்கரை, 100 கிலோ சர்க்கரை மற்றும் 2 லாரி 'ட்யூப்'களில் 110 லிட்டர் சாராயம் இருந்தது. அருகில், எஸ்.பி.எம்.எல்., வகை ஒற்றைக் குழல் நாட்டுத் துப்பாக்கி ஒன்று இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.இதுதொடர்பாக கரியாலுார் போலீசார் வழக்கு பதிந்து, கோவிந்தன், தொங்கியாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி,44; ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை