உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தீப்பிடித்து 2 வீடு எரிந்து சாம்பல்

தீப்பிடித்து 2 வீடு எரிந்து சாம்பல்

திருக்கோவிலுார்; மணலுார்பேட்டை அருகே 2 கூரை வீடுகள் தீப்பற்றி எரிந்து சாம்பலானது.மணலுார்பேட்டை அடுத்த சு.கள்ளிப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையன் மகன் முருகன், 45; இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் ராஜாமணி, 50; இரு குடும்பத்தாரும் குடும்பத்துடன் பெங்களூருவில் கூலி வேலை செய்து வருகின்றனர்.இருவரின் வீடுகளும் பூட்டப்பட்டிருந்த நிலையில், நேற்று மாலை 6:30 மணிக்கு, திடீரென தீ பற்றியது. காற்று பலமாக வீசியதால் தீ வேகமாக பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதனை பார்த்த கிராம மக்கள் ஒன்று திரண்டு தீயை அணைத்தனர். ஆனாலும், வீட்டிலிருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி