உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / டிராக்டர் டிப்பர் மீது பைக் மோதல் மூங்கில்துறைப்பட்டில் 2 பேர் பலி

டிராக்டர் டிப்பர் மீது பைக் மோதல் மூங்கில்துறைப்பட்டில் 2 பேர் பலி

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே சாலையோரம் கரும்பு ஏற்றிக்கொண்டு நின்றிருந்த டிராக்டர் டிப்பர் மீது பைக் மோதி, இரு வாலிபர்கள் உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள வடமாமந்துார் தக்கா பகுதியை சேர்ந்தவர்கள் தஸ்தகரி மகன் ரசாக், 18; சபிக் மகன் சையத் அப்தப், 18; இருவரும், யமாகா பைக்கில், நேற்று முன்தினம் இரவு வடமாமந்துாரில் இருந்து மூங்கில்துறைப்பட்டு நோக்கி சென்றனர். அப்போது, வடமாமந்துார் - மூங்கில்துறைப்பட்டு சாலையோரம் கரும்பு லோடு ஏற்றிய டிராக்டர் டிப்பர் நிறுத்தப்பட்டு இருந்தது. இரவு 9:00 மணிக்கு சையத் அப்தப், ரசாத் சென்ற பைக், கரும்பு லோடுடன் நின்றிருந்த டிராக்டர் டிப்பர் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலின்பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீசார் விரைந்து சென்று ரசாக் மற்றும் சையத் அப்தப் உடல்களை மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை