மேலும் செய்திகள்
மின்சாரம் தாக்கி மின் ஊழியர் காயம்
04-Apr-2025
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே கார் மோதிய விபத்தில், 2 போலீசார் காயம் அடைந்தனர்.சென்னையில் இருந்து சேலம் நோக்கி சென்ற லாரி, நேற்று காலை 3:30 மணிக்கு உளுந்துார்பேட்டை அடுத்த பு.மாம்பாக்கம் அருகே பழுதானது. அப்பகுதி நெடுஞ்சாலை ரோந்து போலீசார், அங்கு சென்று லாரியின் பின்பக்கமாக வாகனத்தை நிறுத்தி, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சென்னையிலிருந்து திருச்சிக்கு சென்று கொண்டிருந்த கார், பின்பக்க டயர் வெடித்து ரோந்து போலீஸ் வாகனம் மீது மோதியது. இதில், போலீசார் ரவி, 49; பால்ராஜ், 54; ஆகியோர் காயமடைந்து, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உளுந்துார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
04-Apr-2025