உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  உதவி பேராசிரியர் தேர்வு 266 பேர் பங்கேற்பு

 உதவி பேராசிரியர் தேர்வு 266 பேர் பங்கேற்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) நடத்தும் அரசு கலை, அறிவியல் மற்றும் அரசு கல்வியியல் கல்லுாரிகளுக்கான உதவி பேராசிரியர் பணியிட தேர்வு நேற்று நடந்தது. மாநிலம் முழுதும் உள்ள அரசு கலை, அறிவியல் மற்றும் அரசு கல்வியியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள 2,708 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் அக்டோபர் 16ம் தேதி தேர்வு அறிவிப்பு வெளியிட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 297 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதையடுத்து, நேற்று கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் நடந்த தேர்வில் 31 பேர் ஆப்சென்ட் ஆனதை தொடர்ந்து 266 பேர் பங்கேற்றனர். இதில், 12 மாற்றுத் திறனாளி தேர்வர்கள் இடம்பெற்றனர். அவர்களுக்கு உதவ 2 'ஸ்கிரைபர்' நியமிக்கப்பட்டனர். தேர்வு, ஓ.எம்.ஆர்., முறையில் காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடந்தது. இதனைத் தொடர்ந்து, பிற்பகல் 3:00 மணி முதல் 4:00 மணி வரை எழுத்துத் தேர்வும் நடத்தப்பட்டது. தேர்வு மையத்தை சி.இ.ஓ., கார்த்திகா பார்வையிட்டார். தேர்வு நடைமுறைகளை பள்ளிக்கல்வி இணை இயக்குநர் ராமகிருஷ்ணன் கண்காணித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ