உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது

கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது

மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டு அருகில் கஞ்சா வைத்திருந்த, 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மூங்கில்துறைப்பட்டு அடுத்த இளையாங்கண்ணி கூட்ரோட்டில் நேற்று சப் இன்ஸ்பெக்டர் சிவன்யா மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த திருவண்ணாமலை மாவட்டம் பெருங்களத்தூரை சேர்ந்த செல்வம் மகன் பிரவீன் 19; ஏழுமலை மகன் விஷ்வா 19; பரந்தாமன் மகன் பிரதீப் 19; மற்றும் சின்னசேலம், அக்கராபாளையம் அமலநாதன் மகன் சஞ்சய் 19; ஆகிய, 4 பேரை சோதனை செய்தனர். இதில் அவர்களிடம், 560 கிராம் கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.இதில், விஷ்வா அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். மற்ற, 3 பேரை போலீசார் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி