குட்கா விற்ற 3 பேர் கைது
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அகரகோட்டாலம், வாணியந்தல் ஆகிய பகுதிகளில் உள்ள மளிகை கடை மற்றும் பெட்டிக் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர்கள் பரிமளா, மாணிக்கம் மற்றும் போலீசார் நேற்று முன்தின ம் மாலை அப்பகுதியில் உள்ள கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர். அதில் கடைகளில் ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த அகரகோட்டாலம் சேர்ந்த பாலாஜி,42; அன்பழகன்,41; வாணியந்தல் ஜெகநாதன், 46; ஆகியோர் தங்களது கடைகளில் புகையிலை பொருட்கள விற்பனை செய்தது தெரிந்தது. இதனையடுத்து மூன்று பேரிடமிருந்து 2,200 ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து மூவரையும் கைது செய்தனர்.