உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சங்கராபுரம் அருகே 3 சவரன் நகை திருட்டு

சங்கராபுரம் அருகே 3 சவரன் நகை திருட்டு

சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே வீடுபுகுந்து 3 பவுன் நகை திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.சங்கராபுரம் அடுத்த விரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மரியசூசை மனைவி ேஷாபியா லாரன்ஸ், 48; இவர் கடந்த 15 நாட்களுக்கு முன், தனது 3 சவரன் ஆரத்தை துணிப்பையில் போட்டு, வீட்டில் உள்ள இரும்பு பெட்டியில் வைத்திருந்தார்.நேற்று முன்தினம் பெட்டியை திறந்து பார்த்த போது ஆரம் திருடு போனது தெரியவந்தது.இதுகுறித்து ேஷாபியா லாரன்ஸ் அளித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !