உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது

கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது

உளுந்துார்பேட்டை : எலவனாசூர்கோட்டை அருகே கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.எலவனாசூர்கோட்டை அடுத்த எஸ். மலையனுார் அருகே கஞ்சா வைத்தியிருப்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், எலவனாசூர்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, சந்தேகப்படும்படியாக நின்றியிருந்த மூன்று பேரை மடக்கி, விசாரித்தனர்.எஸ்.மலையனுார் ஜெகன் மகன் ஜெயபிரகாஷ், 23; நெய்வனை தட்சணாமூர்த்தி மகன் பார்த்திபன், 21; மேலப்பாளையம் சக்திவேல் மகன் ராஜேஷ், 19, ஆகியோர் என்பதும், அவர்கள் 100 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது.அதன்பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து மூன்று பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ