மேலும் செய்திகள்
முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு
19-Dec-2025
கள்ளக்குறிச்சி: முதல்வர் ஸ்டாலின் வருகையொட்டி வடக்கு மண்டல ஐ.ஜி., மேற்பார்வையில் 3,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். புதிய கலெக்டர் அலுவலகம் திறப்பு விழா, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, முன்னாள் முதல்வர் கருணாநிதி வெண்கல சிலை திறப்பு விழா உட்பட பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதாக முதல்வர் ஸ்டாலின் இன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வருகை புரிகிறார். முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி அவரை வரவேற்கும் பொருட்டு உளுந்துார்பேட்டை-சேலம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மற்றும் மாவட்ட எல்லை பகுதியில் மாவட்ட தி.மு.க., சார்பில் வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு பணிகள் மற்றும் போக்குவரத்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு வடக்கு மண்டல ஐ.ஜி., அஷ்ராகார்க் மேற்பார்வையில் டி.ஐ.ஜி.,க்கள் உமா, தேவராணி தலைமையில், 10 எஸ்.பி.,க்கள், 10 ஏ.டி.எஸ்.பி.,க்கள், 30 டி.எஸ்.பி.,க்கள், 80 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 3 ஆயிரத்து 200 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர்.
19-Dec-2025