உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் 343 மனுக்கள்

பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் 343 மனுக்கள்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் 343 மனுக்கள் பெறப்பட்டது.கள்ளக்குறிச்சியில் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில், வருவாய்த்துறை நிலப்பட்டா குறைகள், நில அளவை, பட்டா மாற்றம், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, வேளாண்மைத்துறை, காவல்துறை, ஊரக வளார்ச்சித்துறை, நகராட்சி என பல்வேறு துறை சார்ந்த கோரிக்கைகள் பொதுபிரச்னைகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து 331 மனு, மாற்றுத்திறனாளி நபர்களிடமிருந்து 12 மனு என மொத்தம் 343 பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.முன்னதாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 3 பேருக்கு இலவச பஸ் பயண அட்டையும், ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஊன்றுகோலையும் கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் குப்புசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனலட்சுமி, மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்ரமணி உட்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ