உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வீட்டின் பூட்டை உடைத்து 3.5 சவரன் நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 3.5 சவரன் நகை திருட்டு

கச்சிராயபாளையம்: செம்படாகுறிச்சி கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 3.5 சவரன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கச்சிராயபாளையம் அடுத்த செம்படாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால் மனைவி பாப்பாத்தி, 42; இவர் தனது கணவருடன் கோயம்பத்துாரில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 10ம் தேதி காலை, கோயம்புத்துாரில் இருந்து பாப்பாத்தி தனது வீட்டிற்கு வந்தார்.அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்து 3.5 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி செயின் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை