மேலும் செய்திகள்
மக்கள் குறைகேட்பு கூட்டம்
05-Aug-2025
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 370 மனுக்கள் பெறப்பட்டது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பட்டா மாற்றம், நில அளவை, இலவச வீட்டு மனை கோருதல், மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உதவி தொகை, மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவி கோருதல், சாலை வசதி ஏற்படுத்தி தருதல், தெரு மின்விளக்கு அமைத்தல், குடிநீர் வசதி, வங்கி கடனுதவி, ஆக்கிரமிப்பு அகற்றம், நீர்நிலை துார்வாருதல் உட்பட அனைத்து துறை சார்ந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இதில், பொதுமக்களிடமிருந்து 364 மனுக்களும், மாற்றுத்திறனாளிகள் 6 மனுக்கள் என மொத்தம் 370 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு உடனடி தீர்வு காணுமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். தொடர்ந்து, தாட்கோ மூலம் நன்னிலம் மகளிர் நில உடமை திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின 3 விவசாயிகள் தலா 54 சென்ட் பரப்பளவு கொண்ட நிலம் வாங்க மானியம் வழங்கப்பட்டது. ஒரு விவசாயிக்கு 5 லட்சம் வீதம் 3 விவசாயிகளுக்கு, ரூ.15 லட்சம் மானியமும், 100 சதவீத இலவச பத்திர பதிவு கட்டணமும், பதிவு செய்யப்பட்ட அசல் கிரைய பத்திரமும் வழங்கப்பட்டது. கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சுமதி மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
05-Aug-2025