உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குறைதீர்வு கூட்டத்தில் 386 மனுக்கள் குவிந்தது

குறைதீர்வு கூட்டத்தில் 386 மனுக்கள் குவிந்தது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் 386 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் வருவாய் துறை, நிலப்பட்டா குறைகள், நில அளவை, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித் தொகை, மகளிர் உரிமை தொகை, குடிநீர் வசதி உட்பட பல்வேறு கோரிக்கை என மொத்தம் 386 மனுக்கள் பெறப்பட்டது. தொடர்ந்து மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.கூட்டத்தில் கால் இழந்த 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.80 ஆயிரத்து 400 மதிப்பில் அதிநவீன செயற்கை கால்கள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ஆவின் விற்பனை மையம் அமைக்க தலா ரூ.50 ஆயிரம் தொகையை கலெக்டர் வழங்கினார். கடந்த கல்வி ஆண்டில் 10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியின் 63 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு கலெக்டர் பிரசாந்த் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.கூட்டத்தில் டி.ஆர்.ஓ.,சத்தியநாராயன் உட்பட அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ