உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது

கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே கஞ்சா விற்பனை செய்த 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி அடுத்த கொங்கராயபாளையம் ஏரிக்கரை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், வரஞ்சரம் சப் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இரு பைக்குகளில் கஞ்சா விற்பனை செய்த 4 பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்து வருகின்றனர். அதில் கொங்கராயபாளையம் அண்ணா நகரை சேர்ந்த பரமசிவம் மகன் விஜயராஜ்,22; கோவிந்தன் மகன் நாராயணசாமி,21; காசிநாதன் மகன் கோபி,22; மணிகண்டன் மகன் சிபிராஜ்,19; என்பது தெரிந்தது. இவர்கள் 4 பேரும் பைக்குகளில் மறைத்து வைத்து கஞ்சா விற்பனை செய்தது தெரிந்தது. இதனையடுத்து அவர்களிடம் இருந்து 340 கிராம் கஞ்சா மற்றும் இரு பைக்குகளை பறிமுதல் செய்து, 4 பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !