உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / திருநாவலுாரில் 44 ஊராட்சி செயலாளர்கள் இடமாற்றம்

திருநாவலுாரில் 44 ஊராட்சி செயலாளர்கள் இடமாற்றம்

உளுந்துார்பேட்டை: திருநாவலுார் ஒன்றியத்தில் 44 ஊராட்சி செயலாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.உளுந்துார்பேட்டை தாலுகா, திருநாவலுார் ஒன்றியத்தில் 44 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள் நிர்வாக காரணங்களுக்காகவும், மாற்று இடம் கோரியவர்களுக்காகவும் இடம் மாறுதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி 44 ஊராட்சி செயலாளர்கள் இடமாற்றம் செய்து திருநாவலுார் பி.டி.ஓ., செல்வபோதகர் உத்தரவிட்டுள்ளார்.ஒட்டுமொத்தமாக ஊராட்சி செயலாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை