உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வித்யா மந்திர் பள்ளியில் 46ம் ஆண்டு விளையாட்டு விழா

வித்யா மந்திர் பள்ளியில் 46ம் ஆண்டு விளையாட்டு விழா

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியின் 46ம் ஆண்டு விளையாட்டு விழா போட்டி நடந்தது. பள்ளி வளாகத்தில் நடந்த போட்டி துவக்க விழாவிற்கு சுனில்குமார் வரவேற்றார். அறக்கட்டளை தலைவர் மகாவீர்சந்த் குத்துவிளக்கேற்றினார். ரோட்டரி கிளப் தலைவர் செந்தில்குமார் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்து போட்டிகளை துவக்கி வைத்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாலையில் நடந்த விழாவில் பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. பள்ளி செயலாளர் மதிவாணன், பொருளாளர் விமல் குமார், துணை செயலாளர் கவர்லால், அறக்கட்டளை உறுப்பினர்கள் ஏழுமலை, சஞ்சன், நிதேஷ், கார்த்திகேயன், திலீப்குமார், ரிங்கு சுனில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் அருள், துணை முதல்வர் ஞானசேகரன், நிர்வாக அலுவலர் ராஜேஷ்குமார் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ