உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கலெக்டர் அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த 5 பேர் கைது

கலெக்டர் அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த 5 பேர் கைது

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டம், சித்தேரிப்பட்டு காந்தி நகரை சேர்ந்தவர் முருகேசன்,49;. இவர் வீட்டு மனை ஆக்கிரமிப்பு பிரச்னை தொடர்பாக நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். கையோடு பெட்ரோல் கேன் எடுத்து வந்திருந்த அவர்கள் தீக்குளிக்கப் போவதாக கூறினர்.அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், பெட்ரோல் கேனை பறிக்க முயன்றனர். தடுக்க முயன்றால் போலீசார் மீதும் ஊற்றுவோம் என்று மிரட்டியுள்ளனர். போலீசார் அவர்களிடம் பெட்ரோல் கேனை பறித்தனர்.போலீசாரை மிரட்டியதாக, முருகசேன்,49; அவரது மனைவி ராணி,46; மகன் லோகேஷ்,22; மற்றும் பாவந்துாரை சேர்ந்த சிவஞானம்,32; முருகசேன் தந்தை ஆறுமுகம்,75; ஆகிய 5 பேர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து, கைது செய்தனர்.இதில் முருகேசன், லோகேஷ், சிவஞானம் ஆகியோர் கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். ஆறுமுகம் ராணி ஆகிய இருவரும் ஸ்டேஷன் பெயிலில் விடுவிக்கப்பட்டனர்.கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வரும் பொதுமக்கள் மண்ணெண்ணெய் மற்றும் பெட்ரோல் கேனுடன் வந்து, அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டால் கைது செய்து சிறையில் அடைக்கப் படுவார்கள் என போலீசார் எச்சரித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை