உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் நகை திருட்டு

திருநாவலுார் : திருநாவலுார் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் நகையை திருடிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். உளுந்துார்பேட்டை தாலுகா கிளியூர் பகுதியை சேர்ந்தவர் கலியன் மகன் முருகன், 45; கூலித் தொழிலாளி. இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் வெளியூர் சென்று இருந்தார். நேற்று காலை 6 மணியளவில் முருகன் வீட்டில் பூட்டப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் முருகனுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் முருகன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 5 சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். முருகன் புகாரின் பேரில் திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை