உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாவட்டத்தில் 65 ஏரிகள் மீன் வளர்ப்பு குத்தகை ஏலம்

மாவட்டத்தில் 65 ஏரிகள் மீன் வளர்ப்பு குத்தகை ஏலம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 65 ஏரிகள் மீன் வளர்ப்பு குத்தகை ஏலம் விடப்படுகிறது. இது குறித்து கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திகுறிப்பு; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி வட்டத்திற்குட்பட்ட 11 ஏரிகள், உளுந்துார்பேட்டை வட்டத்தில் 29 ஏரிகள், திருக்கோவிலுார் வட்டத்தில் 9 ஏரிகள், சங்கராபுரத்தில் வட்டத்தில் 3 ஏரிகள், வாணாபுரம் வட்டத்தில் 13 ஏரிகள் என மொத்தம் 65 ஏரிகள் மீன் வளர்ப்புக்கு குத்தகை ஏலம் விடப்படுகிறது. www.tntenders.gov.inஎன்ற இணையதளத்தில் மின்னணு ஒப்பந்தப்பபுள்ளி மூலம் 3 ஆண்டுகளுக்கு குத்தகை விடப்பட உள்ளன. ஏரியின் குத்தகை ஏலம் நாள் குறித்த விவரங்களை இணையத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும், கூடுதல் விவரங்களுக்கு விழுப்புரம் தாட்கோ வளாகம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம். அதேபோல் gmail.comஎன்ற இணையதளத்திலும், 04146-259329 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு அறியலாம். இவ்வாறு அதில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ