உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சங்கராபுரத்தில் புகையிலை பொருள் விற்ற 7 கடைக்கு சீல்

சங்கராபுரத்தில் புகையிலை பொருள் விற்ற 7 கடைக்கு சீல்

சங்கராபுரம்.: சங்கராபுரம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.சங்கராபுரம் பகுதியில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை ஜரூராக நடக்கிறது. புகையிலை பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு, சுகாதாரத்துறையினர் நடத்திய ஆய்வில் சங்கராபுரம் பகுதியில் 7 கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்வது தெரியவந்தது. போலீசார் 7 கடை உரிமையாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.இந்நிலையில், உணவு பாதுகாப்பு அலுவலர் சண்முகம் தலைமையிலான அலுவலர்கள் பூட்டை ரோடு, எஸ்.குளத்துார், விரியூர், கடுவனுார், புதுப்பாலப்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தமிழக அரசு தடை செய்த குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த சங்கராபுரம் பூட்டை ரோடு கோதண்டபாணி பெட்டிக்கடை, ஆறுமுகம் டீக்கடை, விரியூர் வின்சன்ட் ஆரோக்கியராஜ், தங்கபிரகாசம், கடுவனுார் சந்தோஷ்குமார், எஸ்.குளத்துார் பாலசுப்ரமணி, புதுப்பாலப்பட்டு கோபாலகிருஷ்ணன் ஆகியோரது கடைகளுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். உடன் ஏட்டு மாரியப்பன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை