மேலும் செய்திகள்
பெண்ணை கர்ப்பமாக்கியவர் மீது 'போக்சோ'
06-Nov-2024
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்த பட்டதாரி வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். உளுந்துார்பேட்டை அடுத்த பெரும்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா மகன் சதீஷ்குமார், 29; பி.இ., பட்டதாரியான இவர், 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சிறுமி தற்போது 5 மாத கர்ப்பணியாக உள்ள நிலையில், அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த போது சிறுமியை திருமணம் செய்தது தெரிய வந்தது. உளுந்துார்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து சதீஷ்குமாரை கைது செய்தனர்.
06-Nov-2024