உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மின்வேலியில் சிக்கி பூ வியாபாரி பலி

மின்வேலியில் சிக்கி பூ வியாபாரி பலி

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே மின்வேலியில் சிக்கி பூ வியாபாரி இறந்தார்.உளுந்துார்பேட்டை அடுத்த கிளியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் சரத்குமார், 27; பூ வியாபாரி. இவர், நேற்று கல்லறை திருவிழாவுக்காக காலை 6:00 மணியளவில் பூக்களைப் பறிக்க வயல்வெளிக்குச் சென்றார்.அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கிளியானந்தன், 57; என்பவரின் வயல்வெளி வழியாக செல்ல முயன்றபோது, மின்வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் விரைந்து சரத்குமாரின் உடலை மீட்டு பிரதேச பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து மின்வேலி அமைத்த கிளியானந்தனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை