மேலும் செய்திகள்
ஆற்றை கடந்த முதியவர் மாயம்
02-Dec-2024
பெண்ணையாற்றில் மூழ்கிய தொழிலாளி உடல் மீட்பு
09-Dec-2024
திருக்கோவிலுா : திருக்கோவிலுார் அருகே ஆற்றில் மீன்பிடிக்க இறங்கியபோது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவரை தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த அத்தண்டமருதுார் ஊராட்சிக்குட்பட்ட, பிடாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் ரமேஷ், 38; நேற்று மாலை 3:00 மணியளவில் அணைக்கட்டு அருகே தென்பெண்ணை ஆற்றில் மீன்பிடிக்க இறங்கினார். அப்போது சுழலில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டார்.தகவலறிந்த திருக்கோவிலுார் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ரமேஷை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
02-Dec-2024
09-Dec-2024