உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அ.பாண்டலம் ஊராட்சி மன்ற தலைவர் இல்ல திருமண விழா

அ.பாண்டலம் ஊராட்சி மன்ற தலைவர் இல்ல திருமண விழா

சங்கராபுரம், : சங்கராபுரத்தில் அ.பாண்டலம் ஊராட்சி மன்ற தலைவர் இல்ல திருமண விழா நடந்தது. அ.பாண்டலம் ஊராட்சி மன்ற தலைவர் பாப்பாத்தி நடராஜன், கல்வித்துறை பணி ஓய்வு பெற்ற நடராஜன் தம்பதியினரின் மகன் பொறியாளர் நவின்ராஜ், கோவை புதுர் ஜீவாநந்தன்-சுனிதா தம்பதியினரின் மகள் பொறியாளர் நித்யாவின் திருமணம் சங்கராபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.உதயசூரியன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன்,மணி கண்ணன் எம்.எல்.ஏ., மலையரசன் எம்.,பி.,மாநில மகளிரணி துணை செயலாளர் அங்கையற்கண்ணி முன்னிலை வகித்தனர்.ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் வரவேற்றார்.விழாவில் அமைச்சர் வேலு சிறப்பு விருந்திரனராக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார்.விழாவில் சங்கராபுரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் திலகவதி நாகராஜன்,பேருராட்சி தலைவர் ரோஜாரமணி, நகர செயலாளர் துரை தாகப்பிள்ளை,அரசம்பட்டு லட்சுமி அர்ஜூனன்,தொழிலதிபர் கதிரவன், வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். .வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் பாப்பாத்தி நடராஜன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !