மேலும் செய்திகள்
மதுபாட்டில் விற்றவர் கைது
02-Sep-2025
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே தீ விபத்தில் கூரை வீடு எரிந்து சேதமடைந்தது. சங்கராபுரம் அடுத்த எஸ்.குளத்துாரைச் சேர்ந்தவர் முனியன். விவசாயி. நேற்று காலை 11:00 மணிக்கு யாரும் இல்லாத நிலையில், திடீரென இவரது கூரை வீடு தீ பிடித்து எரிந்தது. தகவலறிந்த சங்கராபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். தீ விபத்தில் வீட்டில் இருந்த துணிகள், வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர். தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரிசி, எண்ணெய், வேட்டி சேலை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வருவாய் ஆய்வாளர் திவ்யா, வி.ஏ.ஓ., வெங்கடேசன், ஊராட்சி தலைவர் அய்யம்மாள் வழங்கினர்.
02-Sep-2025