உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / டி.எஸ்.எம்., தொழில்நுட்ப கல்லுாரியில் அப்துல்கலாம் 94வது பிறந்தநாள் விழா

டி.எஸ்.எம்., தொழில்நுட்ப கல்லுாரியில் அப்துல்கலாம் 94வது பிறந்தநாள் விழா

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி டி.எஸ்.எம்., தொழில்நுட்ப கல்லுாரியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கள்ளக்குறிச்சி மேலூர் டி.எஸ்.எம். ஜெயின் தொழில்நுட்ப கல்லுாரியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 94 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. கல்லுாரி செயலாளர் அசோக் குமார் தலைமையில் அப்துல் கலாமின் உருவப்படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தப்பட்டது.தொடர்ந்து கல்லுாரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா கல்லுாரி முதல்வர் ஈஸ்வரன் முன்னிலையில் நடந்தது. கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, பாட்டு, கட்டுரை, கவிதை மற்றும் ஓவிய போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கல்லுாரி பேராசிரியர்கள் சுரேஷ், ராஜேஸ்வரி, முகுந்தன், பெரியசாமி, சந்தோஷ்குமார், வீராசாமி, செல்வரசன், ரகுகுமார் அரவிந்த், கலைசெல்வி, கார்த்திகாபானு, பானுப்ரியா உள்ளிட்ட அனைத்து துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். கல்லுாரி என்.எஸ்.எஸ்., திட்ட இயக்குனர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை