உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / எந்த சூழ்நிலையும் எதிர்கொள்ளும் திறன்

எந்த சூழ்நிலையும் எதிர்கொள்ளும் திறன்

இப்பள்ளியில் கடந்த 1994 முதல் 1999 வரை படித்ததை மிகவும் பெருமையாக கருதுகிறேன். அன்று பள்ளியில் மரத்தடி நிழலில் படித்த ஞாபகம் இன்றும் நினைவில் உள்ளது. இன்று சிறந்த சட்ட ஆலோசகராக திகழ்வதில் பயிற்றுவித்த ஆசிரியர் பெருமக்களே நித்தம் நித்தம் நினைவில் வந்து கொண்டிருக்கிறார்கள். பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களான நாங்கள் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கினாலும் இன்றும் நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். அன்றைய அரசு பள்ளி மாணவர்கள் இன்று சிறந்த வழக்கறிஞர், போலீஸ், ஆசிரியர் பணி, ராணுவம் , மென்பொருள் துறை என பல துறைகளில் பணிபுரிந்தாலும், நாங்கள் ஒருவருக்கொருவர் நட்புணர்வுடன் பழகுகிறோம். எந்த சூழ்நிலையும் எதிர்கொள்ளும் திறமை அரசுப்பள்ளியில் படித்த எங்களால் முடியும் என்று பெருமிதம் கொள்கிறேன். நல்லொழுக்கத்துடன் கூடிய வாழ்க்கை நெறியும் கற்பித்த எங்கள் தமிழ் ஆசிரியை பத்மினி ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் ஆசிரியர் பத்மநாபன், அறிவியல் ஆசிரியர் மனுவேல், உடற்கல்வி ஆசிரியர் அரிகிருஷ்ணன் என பல ஆசிரியர்கள் இன்றும் எங்கள் நினைவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சீனிவாசன், வழக்கறிஞர், தமிழ்நாடு அரசு நோட்டரி பப்ளிக்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை