வேகத்தடையில் பெயிண்ட் அடிக்க கோரிக்கை
சங்கராபுரம்; அரசம்பட்டு-பாலப்பட்டு சாலையில் உள்ள வேகத்தடைகளில் வெள்ளை பெயிண்ட் அடிக்க கோரிக்கை எழுந்துள்ளது. சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு-பாலப்பட்டு சாலையில், 8 இடங்களில் வேகத்தடைகள் உள்ளன. இந்த வேகத்தடைகளில் இருந்த வெள்ளை பெயிண்ட் அழிந்து விட்டது. இதனால் சாலையில் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் வேகத்தடை தெரியாமல், கீழே விழுந்து விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இந்த சாலையில் உள்ள வேகத்தடைகளில் வெள்ளை பெயிண்ட் அடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.