உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வேகத்தடைகளால் விபத்து

வேகத்தடைகளால் விபத்து

சங்கராபுரம் : சங்கராபுரம் பகுதியில் உள்ள வேகத்தடைகளுக்கு பெயிண்ட் அடிக்காததால் விபத்து அபாயம் உள்ளது.சங்கராபுரம் அடுத்த பூட்டை, செம்பராம்பட்டு, அரசம்பட்டு, பாலப்பட்டு சாலையில் வேகத்தடைகள் அதிகளவில் உள்ளது. இந்த சாலையில் உள்ள வேகத்தடைகளில் வெள்ளை பெயிண்ட் அழிந்து விட்டதால் வேகத் தடை இருப்பது தெரியவில்லை.இதனால் இரு சக்கர வாகனங்களில் வேகமாக வருவோர் வேகத்தடைகளில் வேகமாக ஏறி விபத்தில் சிக்கி காயமடைவது வாடிக்கையாக நடந்து வருகிறது. சங்கராபுரம் பூட்டை சாலையில் புதுபாலப்பட்டு வரை உள்ள வேகத்தடை களில் வெள்ளை பெயிண்ட் அடிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை