சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கள்ளக்குறிச்சி: நமச்சிவாயபுரத்தில் தி.மு.க., அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.சின்னசேலம் அடுத்த நமச்சிவாயபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு, தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத்தலைவர் தங்கவேல், துணை செயலாளர்கள் சோலைமுத்து, கண்ரோஸ், மாவட்ட பிரதிநிதிகள் முருகேசன், பெரியசாமி, சுதா மணிகண்டன், வழக்கறிஞர் சங்க தலைவர் சேகர், மாவட்ட கவுன்சிலர் கலையரசி முன்னிலை வகித்தனர். இளைஞரணி அமைப்பாளர் தாகப்பிள்ளை வரவேற்றார். தொகுதி பொறுப்பாளர் தாமரைகண்ணன், மாவட்ட அவைத்தலைவர் ராமமூர்த்தி வாழ்த்தி பேசினர். சிறப்பு விருந்தினராக கொள்கை பரப்பு செயலாளர் சபாபதி மோகன் பங்கேற்றார். அவர் பேசுகையில், ' தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும் மகளிர் உரிமைத்தொகை, கட்டணமில்லா பஸ் பயணம், மக்களை தேடி மருத்துவம், காலை உணவு திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், நான் முதல்வன் என பல்வேறு வகையான பயனுள்ள திட்டங்களை முதல்வரால் செயல்படுத்தப்பட்டுள்ளன. இத்திட்டங்கள் மக்களிடம் வரவேற்பை பெற்றிருப்பதால், அடுத்த 20 வருடங்களுக்கு தி.மு.க.,வை அசைக்க முடியாது,' என்றார். இதில், ஊராட்சி தலைவர் தமிழ்செல்வி நன்றி கூறினார்.