உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அக்ரஹார தெருவில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை தேவை

அக்ரஹார தெருவில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை தேவை

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அக்ரஹார தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கள்ளக்குறிச்சி நகராட்சி காய்கறி மார்க்கெட்டிலிருந்து கடை வீதிக்குச் செல்லும் அக்ரஹார தெருவில் ஏராளமான காய்கறி மற்றும் மளிகை கடைகள் உள்ளன. இந்த சாலை 20 முதல் 25 அடி அகலமுள்ள நிலையில் கடைக்காரர்கள் தங்களது பொருட்களை கடைகளுக்கு முன்பு தெருவிலேயே பரப்பி வைத்துள்ளனர்.இதனால் மார்க்கெட் பகுதியின் நுழைவு பகுதியிலிருந்து தெரு முழுவதும், ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி சாலை மிகவும் சுருங்கியுள்ளது. தெரு முழுதும் கடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த அக்ரஹார தெருவில் ஆக்கிரமிப்புகள் முற்றிலுமாக அகற்றப்பட்டது. ஆனால் முறையான பராமரிப்பு இல்லாததால், மீண்டும் கடைகளின் ஆக்கிரமிப்புகளால் குறுகிய தெருவாக மாறிவிட்டது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த அவதியடைகின்றனர்.எனவே, கள்ளக்குறிச்சி மேல் அக்ரஹார தெருவின் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை