உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / டிரான்ஸ்பார்மர் காயில் திருட்டைத் தடுக்க நடவடிக்கை தேவை! எப்.ஐ.ஆர்., பதிவு செய்வதில் போலீஸ் மெத்தனம்

டிரான்ஸ்பார்மர் காயில் திருட்டைத் தடுக்க நடவடிக்கை தேவை! எப்.ஐ.ஆர்., பதிவு செய்வதில் போலீஸ் மெத்தனம்

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பகுதியில் மின் டிரான்ஸ்பார்மர்களில் தொடர்ந்து காயில் மற்றும் ஆயில் திருடு போவதைத் தடுக்க போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருக்கோவிலுார் பகுதிகளில் குறிப்பாக விவசாய மின் மோட்டார்களுக்கு செல்லும் டிரான்ஸ்பார்மர்களில் காப்பர் காயில் மற்றும் ஆயில் திருடு போவது அடிக்கடி நிகழ்கிறது. கடந்த மார்ச் 22ம் தேதி தானம்பல்லவாடி டிரான்ஸ்பார்மரில் இருந்த 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காப்பர் காயில் திருடு போனது. இதே போல் சித்தலிங்கமடம், பொன்னியந்தல் பகுதிகளிலும்; திருப்பாலபந்தல், நரியந்தல், தொட்டி, பூமாரி, கீழதாழனுார் உள்ளிட்ட டிரான்ஸ்பார்மர்களில் ஆயில் திருடு போயுள்ளது.இதுகுறித்து மின்துறை அதிகாரிகள், சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களில் புகார் தெரிவித்தும் சி.எஸ்.ஆர்., மட்டுமே பதிவு செய்யப்படுகிறது. எப்.ஐ.ஆர்., பதிவு செய்தால் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்பதால், போலீசார் சி.எஸ்.ஆர்., மட்டும் கொடுப்பதாக மின்வாரிய ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.ஆயில் திருடப்படுவதால் டிரான்ஸ்பார்மர் முழுதும் பழுதடைந்து விடுகிறது. இதனால் ஒட்டுமொத்தமாக டிரான்ஸ்பார்மரையே மாற்ற வேண்டியுள்ளது.எப்.ஐ.ஆர்., பதிவு செய்யாததால் உயரதிகாரிகளுக்கு தெரிவித்து புதிய டிரான்ஸ்பார்மர் பொருத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது.இதனால் அப்பகுதியில் விவசாய நிலங்கள் மின்சாரம் இன்றி பயிர்கள் கருகும் அபாயம் எழுந்துள்ளது. இதனால், மின் ஊழியர்களுக்கும், விவசாயிகளுக்கும் பிரச்னை ஏற்படுகிறது.காவல்துறை துரித நடவடிக்கை மேற்கொண்டு டிரான்ஸ்பார்மர் திருட்டு குறித்து எப்.ஐ.ஆர்., பதிவு செய்வதன் மூலம் சம்மந்தப்பட்ட பகுதிகளில் புதிய டிரான்ஸ்பார்மர் பொருத்த முடியும். அத்துடன் குற்றவாளிகளை கைது செய்தால் தொடரும் திருட்டு சம்பவத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம்.மாவட்ட காவல் துறை இப்பிரச்னையில் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி