மேலும் செய்திகள்
பாலசுப்பிரமணியர் கோவிலில் ஐப்பசி கிருத்திகை விழா
51 minutes ago
பெண்ணை கடத்தி கட்டாய திருமணம் செய்தவர் கைது
52 minutes ago
கார் டிரைவர் தற்கொலை
52 minutes ago
ரிஷிவந்தியம் : கடம்பூரில் நடந்த கிராம சபை கூட்டத்தில், வாணாபுரம் பகுதிக்கு கூடுதல் பஸ் வசதிகள், கூடுதல் அரசு துறை சார்ந்த அலுவலகங்கள், வங்கிகள் விரைவில் அமைக்கப்படும் என கலெக்டர் பேசினார்.ரிஷிவந்தியம் அடுத்த கடம்பூர் கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் இந்திராணி குழந்தைவேல் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன், பி.டி.ஓ.,க்கள் சவுரிராஜன், ரங்கராஜன், தாசில்தார் குமரன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் சண்முகம் தீர்மானங்களை வாசித்தார். சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் ஷ்ரவன்குமார் பங்கேற்று பேசியதாவது:குடிநீர், சாலை, தெருவிளக்குகள் உள்ளிட்ட கிராமத்திற்கு தேவையான அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்ய கிராம சபை கூட்டம் மிக முக்கியமானது. மேலும், கடந்த ஆண்டு பெறப்பட்ட வரித்தொகை, செலவினங்கள், தற்போதைய தேவை குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. தீர்மானங்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, நிதி பெற்று அப்பணிகளை நடத்தப்படுகிறது.இப்பகுதியில் புதிதாக வாணாபுரம் தாலுகாவாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் பல்வேறு துறைகள், வங்கிகள், மற்றும் கூடுதல் பஸ் வசதி உள்ளிட்டவை விரைவில் செயல்படுத்தப்படும் என்று பேசினார். கூட்டத்தில், திட்ட இயக்குநர்கள் (ஊரக வளர்ச்சி முகமை) தனபதி, (மகளிர் திட்டம்) சுந்தர்ராஜன், வேளாண்மை இணை இயக்குநர் அசோக்குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ரெத்தினமாலா, மாவட்ட ஊராட்சி செயலாளர் முரளிதரன், ஒன்றிய கவுன்சிலர் சுசிலா விஜயன், ஊராட்சி துணை தலைவர் செல்வி உட்பட அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
51 minutes ago
52 minutes ago
52 minutes ago