குறைகேட்பு கூட்டம் ஒத்திவைப்பு
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் புயல் மழை நிவாரண பணி காரணமாக ஒத்தி வைக்கப்படுகிறது.கலெக்டர் பிரசாந்த் செய்திகுறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நடந்து வருகிறது. வரும் 9ம் தேதி நடைபெற இருந்த குறைகேட்புக் கூட்டம் புயல் மழை நிவாரண பணி மற்றும் பயிர் சேத கணக்கெடுப்பு பணி காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.