உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரசு கல்லுாரியில் சேர்க்கை பதிவு துவக்கம்

அரசு கல்லுாரியில் சேர்க்கை பதிவு துவக்கம்

திருக்கோவிலுார்: திருக்கோவிலூர் அரசு கலை கல்லூரியில் இட ஒதுக்கீடு முறையில், தரவரிசை மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என, முதல்வர் மகா விஷ்ணு தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: இந்தாண்டு பிளஸ் 2 தேர்வாகிய மாணவர்கள், இக்கல்லூரியில் சேர, இணைய வழி கல்லூரி குறியீட்டு எண் 1081031 மூலம் www.tngasa.inஎன்ற இணையதளத்தில், விண்ணப்பிக்கலாம். பி.ஏ., தமிழ், பி.ஏ., ஆங்கிலம், பி.எஸ்.சி., கணினி அறிவியல், பி.எஸ்.சி., வேதியியல், பி.காம்., வணிகவியல் ஆகிய பாடப்பிரிவுகள் இக்கல்லூரியில் ஆங்கில வழியில் பயிற்றுவிக்கப்படுகிறது. அரசு விதிமுறைகளின் படி, இட ஒதுக்கீடு முறையில், தரவரிசை மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி