மேலும் செய்திகள்
அ.தி.மு.க., பொதுக்கூட்டம்
23-Sep-2024
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் அ.தி.மு.க., சார்பில் அண்ணாதுரை 116வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கி சிறப்புரை யாற்றினார். ஒன்றிய செயலாளர்கள் மணிராஜ், சுப்புராயன் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் துரை வரவேற்றார்.செய்தி தொடர்பாளர் சசிரேகா, தலைமைக் கழக பேச்சாளர் சிவசண்முகம் சிறப்புரையாற்றினர்.ஒன்றிய செயலாளர்கள் செண்பகவேல், சந்திரன், ஏகாம்பரம், ராமலிங்கம், மாவட்ட துணைச் செயலாளர் பரமாத்மா, மாவட்ட மாணவரணி செயலாளர் பாக்கியராஜ், முன்னாள் ஒன்றிய துணைச் சேர்மன் சாய்ராம், ஒன்றிய அவைத் தலைவர் பாண்டியன், நகர துணைச் செயலாளர் கோபால், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
23-Sep-2024