முன்விரோத தகராறு; ஒருவர் மீது வழக்கு
திருக்கோவிலுார் : மணலுார்பேட்டை அருகே முன் விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் ஒருவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.மணலுார்பேட்டை அடுத்த திருவரங்கத்தைச் சேர்ந்தவர் காந்தி, 50; அதே பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மைத்துனர் காமராஜ். இவருக்கு, காந்தி 40 ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்திருந்தார்.அந்த பணத்தை காந்தி திருப்பிக் கேட்டது தொடர்பாக காந்திக்கும், முருகனுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில் கடந்த 16ம் தேதி ஜ.சித்தாமூர் கூட்டு ரோட்டில் நின்றிருந்த காந்தியை, முருகன் திட்டி தாக்கினார். காந்தி கொடுத்த புகாரின் பேரில் முருகன் மீது மணலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.