மவுண்ட் பார்க் பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வில் அபார சாதனை
தியாகதுருகம்: தியாகதுருகம் மவுண்ட்பார்க் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், 10,ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்று அபார சாதனை படைத்துள்ளனர். தேர்வு எழுதிய, 311 பேரும் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். பள்ளியின் தேர்ச்சி 100 சதவீதம் ஆகும். மாணவர் நவநீதகிருஷ்ணன் 494 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றார். இவர் பாடவாரியாக தமிழ் 97, ஆங்கிலம் 99, சமூக அறிவியல் 98, கணக்கு மற்றும் அறிவியல் பாடத்தில் 'சென்டம்' எடுத்து சாதனை படைத்தார். மாணவி பிரீத்தி 493 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 2ம் இடம் பெற்றார். இவர் பாடவாரியாக தமிழ் 97, ஆங்கிலம் 98, சமூக அறிவியல் 98, கணக்கு மற்றும் அறிவியல் பாடத்தில் 'சென்டம்' எடுத்து சாதித்தார்.மாணவிகள் ஜீவிதா, கயல்விழி, லேனா திருவர்ஷினி ஆகியோர் 492 மதிப்பெண் பெற்று 3ம் இடம் பெற்றனர். அறிவியல் 15, கணக்கு 4, சமூக அறிவியல் 1 என முக்கிய பாடங்களில் மொத்தம் 20 'சென்டம்' மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். தேர்வு எழுதிய, 311 மாணவர்களில் 7 பேர் 490 மதிப்பெண்ணுக்கு மேல், 18 பேர் 480 க்கு மேல், 39 பேர் 470க்கு மேல், 66 பேர் 460 க்கு மேல், 93 பேர் 450க்கு மேல், 137 பேர் 425க்கு மேல், 176 பேர் 400 க்கு மேல் மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளனர். மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களை தாளாளர் மணிமாறன் பரிசு வழங்கி பாராட்டினார். முதல்வர் கலைச்செல்வி, துணை முதல்வர்கள் முத்துக்குமரன், வினோதினி, பொறுப்பு ஆசிரியர் மணிகண்டன் உடன் இருந்தனர்.