உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பாதுகாக்க ஆலோசனை

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பாதுகாக்க ஆலோசனை

கள்ளக்குறிச்சி; திருகோவிலுார் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இளம் நெற்பயிர்களை பாதுகாக்க வேளாண் அதிகாரிஆலோசனை வழங்கியுள்ளார்.திருக்கோவிலுார் வேளாண் உதவி இயக்குனர் கிருஷ்ணகுமாரி செய்திக்குறிப்பு:தற்போது மழை நின்றுள்ளதால் வயலில் உள்ள தண்ணீர உடனடியாக வடிகட்ட வேண்டும்.இள மஞ்சள் நிறத்தில் காணப்படும் நெற்பயிர்களுக்கு இலைவழி உரமிட வேண்டும். ஒரு ஏக்கர் நெற்பயிருக்கு, ஒரு கிலோ ஜின்க் சல்பேட், 2 கிலோ யூரியா, 200 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும். மேலும் ஒரு கிலோ சூடோமோனாஸ் மருந்தை 200 லிட்டர் தண்ணீர் கலந்து 10 நாட்கள் இடைவெளியில் 2 முறை தெளிக்க தெளிக்க வேண்டும்.மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர், தண்டு உருளும் பருவம் மற்றும் பூக்கும் பருவத்தில் இருந்தால், 4 கிலோ டி.ஏ.பி., உரம், 10 லிட்டர் தண்ணிரில் முதல் நாள் ஊற வைத்து மறுநாள் வடிகட்ட வேண்டும்.அத்தடன் 2 கிலோ யூரியா மற்றும் ஒரு கிலோ பொட்டாஷ் உரத்தினை 200 லிட்டர் தண்ணீரில் மாலை வேளையில் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். பூச்சி தாக்குதல் அதிகமாக காணப்படும் வயல்களில் வேம்பு சார்ந்த மருந்துகளை தெளிக்கவேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை