உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வேளாண் தொழில் முனைவோர் ஆலோசனைக் கூட்டம்

வேளாண் தொழில் முனைவோர் ஆலோசனைக் கூட்டம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில், வேளாண் தொழில் முனைவோர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வேளாண் தொழில் முனைவோர்கள், வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்களுக்கு வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துதல் தொடர்பான பணிமனை, வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்தல், இயற்கை விவசாயத்தினை ஊக்குவித்தல், இணையவழி வர்த்தக வசதிகளை பயன்படுத்த பயிற்சி அளிக்கப்பட்டது.அத்துடன் பெரிய நிறுவனங்களுடனான விற்பனை தொடர்பினை ஏற்படுத்துதல், உரிமைச்சான்று பெறுதல் உள்ளிட்ட பயிற்சிகளும் வழங்கப்பட்டது.மேலும், விளை பொருட்களை தரம் பிரித்தல், மதிப்புக் கூட்டுதல், சிப்பம் கட்டுதல், பிராண்டிங், மார்க்கெட்டிங் மற்றும் கூட்டத்தில் வேளாண் தொழில் மூலம் உற்பத்தி செய்யப்படும் வேளாண் பொருட்களை உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திட விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைகளுடன் பயிற்சியும் அளிக்கப்பட்டது.இப்பயிற்சியின் மூலம் மாவட்டத்தில் உழவர் உற்பத்தியாளர்களை ஏற்றுமதியாளர்களாக உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.கூட்டத்தில் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சத்தியமூர்த்தி, தொழில் மைய பொது மேலாளர் சந்திரசேகரன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் முருகேசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) அன்பழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி