உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வேளாண்மை சார்ந்த படிப்புகள்; விண்ணப்பங்கள் வரவேற்பு

வேளாண்மை சார்ந்த படிப்புகள்; விண்ணப்பங்கள் வரவேற்பு

கள்ளக்குறிச்சி; வேளாண்மை கல்லுாரிகளில் 2025-26ம் ஆண்டிற்கு வேளாண் சார்ந்த இளங்கலை மற்றும் டிப்ளமோ படிப்பிற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு; தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் 18 உறுப்பு வேளாண்மை கல்லுாரிகளில் 75 காலியிடங்கள், 28 இணைப்பு கல்லுாரிகளில் 901 காலியிடங்கள் என மொத்தம் 976 வேளாண்மை இளங்கலை 4 ஆண்டுகள் பட்டப்படிப்பிற்கான காலியிடங்கள் உள்ளன. மேலும் 2 ஆண்டு வேளாண்மை (டிப்ளமோ) பட்டய படிப்பிற்கு 4 அரசு உறுப்பு கல்வி நிறுவனங்களில் 90 இடங்களும், 3 அரசு இணைப்பு கல்வி நிறுவனங்களில் 19 இடங்கள், 8 இணைப்பு தனியார் நிறுவனங்களில் 323 இடங்கள் என மொத்தம் 432 காலியிடங்கள் உள்ளன. கடந்தாண்டு மற்றும் இவ்வாண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு வேளாண்மை பட்டபடிப்பு மற்றும் பட்டய படிப்புகளுக்கு விண்ணப்பித்து சேர்ந்து பயன் பெறலாம். இது தொழில்நுட்ப படிப்பு என்பதால் எதிர்காலங்களில் வேளாண்மை துறை மற்றும் வேளாண்மை துறை சார்ந்த அரசு நிறுவனங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் துறையில் உள்ள விதைகள், உரங்கள், பூச்சி மருந்துகள், பட்டுப்பூச்சி வளர்ப்பு, மீன் வளர்ப்பு மற்றும் சர்க்கரை ஆலைகள் போன்ற நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்று பயன்பெறலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி