மேலும் செய்திகள்
அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகி ஆலோசனை கூட்டம்
26-May-2025
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டைக்கு அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி வருகையையொட்டி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் வரும் 29ம் தேதி உளுந்துார்பேட்டைக்கு வருகை தரும் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது. விழாவில் திரளாக பங்கேற்பது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் பரமாத்மா, ஒன்றிய செயலாளர்கள் சுப்பராயன், சந்திரன், ஏகாம்பரம், ராமலிங்கம், ஊராட்சி தலைவர்கள் வெங்கடேசன், பரத், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் செல்வகுமார், சம்பத், செல்வராஜ், ஜெயச்சந்திரன், பன்னீர்செல்வம், மனோகரன், மாவட்ட வழக்கறிஞர்ணி துணைச் செயலாளர் திலீப், செந்தில்குமார், நகர துணைச் செயலாளர் கோபால், வார்டு செயலாளர்கள் வெற்றி, வெங்கடேசன், சாய், காமேஷ், உட்பட பலர் பங்கேற்றனர்.
26-May-2025