உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / உளுந்துார்பேட்டை வெங்கடாஜலபதி கோவில் அன்னதான கூட கட்டுமான பணிக்கு பூமி பூஜை அ.தி.மு.க., பொதுச் செயலாளர் துவக்கி வைப்பு

உளுந்துார்பேட்டை வெங்கடாஜலபதி கோவில் அன்னதான கூட கட்டுமான பணிக்கு பூமி பூஜை அ.தி.மு.க., பொதுச் செயலாளர் துவக்கி வைப்பு

கள்ளக்குறிச்சி; உளுந்துார்பேட்டையில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், அன்னதான கூட கட்டுமான பணியை அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். உளுந்துார்பேட்டையில் திருமலா திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இக்கோவிலுக்கான அன்னதான கூடம் ரூ.2 கோடி மதிப்பிலான கட்டிடம் கட்ட பூமி பூஜை நேற்று நடந்தது. அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிச்சாமி பூமி பூஜை செய்து கட்டுமான பணியை துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் குமரகுரு வரவேற்றார். நன்கொடையாளர் மிதுன் பழனிசாமி, பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேசன், செய்தி தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி, எம்.எல்.ஏ., செந்தில்குமார், ஜெ.,பேரவை செயலாளர் ஞானவேல், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அழகுவேல்பாபு, பிரபு, விநாயகா கல்வி குழுமத் தலைவர் நமச்சுவாயம், அவைத் தலைவர் பச்சையாப்பிள்ளை, மாணவரணி செயலாளர் பாக்கியராஜ், ஒன்றிய செயலாளர்கள் மணிராஜ், செண்பகவேல், சுப்ராயன், சந்திரன், ராஜசேகர், தேவேந்திரன், கதிர்.தண்டபாணி, அருணகிரி, துரைராஜ், அய்யப்பா, கிருஷ்ணமூர்த்தி, ஏகாம்பரம், ராஜேந்திரன், அய்யம்பெருமாள், பழனிசாமி, சந்தோஷ், சேகர், பழனி, ராஜாராம், இளந்தேவன், கூட்டுறவு சங்க தலைவர் சம்பத் ஐயர் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் நகர செயலாளர்கள் பாபு, சுப்பு, ஷியாம்சுந்தர், முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் சாய்ராம், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சீனுவாசன், பாசறை செயலாளர் வினோத், இளைஞரணி செயலாளர் ராஜீவ்காந்தி, பொருளாளர் வெங்கடேசன், இணை செயலாளர் ஸ்ரீபாரத் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !