மேலும் செய்திகள்
ஜெ., பேரவை திண்ணை பிரசாரம்
09-Dec-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஜெ., பேரவை சார்பில் கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கி திண்ணை பிரசாரம் நடந்தது. உளுந்துார்பேட்டை அடுத்த ஆசனுாரில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் ஞானவேல் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் மணிராஜ், சுப்ராயன், முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் சாய்ராம் ஆகியோர், முன்னிலை வகித்தனர். ஒன்றிய அவை தலைவர் செல்வராசு வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் குமரகுரு பங்கேற்று, கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி திண்ணை பிரசாரம் செய்தார். இதில் மாவட்ட மாணவரணி செயலாளர் பாக்கியராஜ், எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் ராஜீவ்காந்தி உட்பட பலர் பங்கேற்றனர். பேரவை இணை செயலாளர் மதியழகன் நன்றி கூறினார்.
09-Dec-2025