உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் தி.மு.க., குற்றச்சாட்டு

அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் தி.மு.க., குற்றச்சாட்டு

ரிஷிவந்தியம்: அ.தி.மு.க., தனது இருப்பைக்காட்ட ஆர்ப்பாட்டம் நடத்துவதாக, வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., குற்றம் சாட்டி உள்ளார். அவரது அறிக்கை: எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் வாணாபுரத்தில் பயணியர் நிழற்குடை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில், கட்டுமான பணியாளர்கள் தன்னிச்சையாக சென்ட்ரிங் பலகையை அகற்றியதால், கடந்த மார்ச்.,25ம் தேதி நிழற்குடையின் மேற்புற அலங்கார வளைவு சரிந்து, விழுந்தது. இதனால் யாருக்கும், எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. தகவலறிந்த பி.டி.ஓ.,க்கள், பொறியாளர்கள் பயணியர் நிழற்குடை கட்டடத்தை ஆய்வு செய்து கலெக்டருக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.இந்நிலையில், அ.தி.மு.க., தனது இருப்பை காட்டுவதற்காக வாணாபுரத்தில் இன்று ஆர்ப்பாட்டம் செய்கிறது. மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வரும் ஆக்கப்பூர்வமான பணிகளை பொறுத்துக்கொள்ள முடியாமலும், உண்மை நிலை தெரியாமலும் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிச்சாமி அவசர, அவசரமாக ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !