முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 30 வருடங்களுக்கு முன் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. ரிஷிவந்தியம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். கடந்த 1996 - 1997ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் 30 ஆண்டுகளுக்கு பின் பள்ளியில் சந்தித்தனர். மேலும், பள்ளியில் படித்தபோது ஆசிரியராக பணிபுரிந்த கணபதி, சண்முகம், ரேவதி, மணியம்மை, ஷேக்அலி, விஜயகுமார், ராஜா, ஞானசேகரன், மணிக்கண்ணன், சவுந்தர்ராஜன் ஆகியோருக்கு முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்களிடம் தங்களை அறிமுகப்படுத்தி கொண்டனர். தொடர்ந்து, தங்களது வகுப்பறைக்கு சென்று அமர்ந்து பழைய நினைவுகளையும், தற்போதைய வேலை, குடும்பம் குறித்த தகவல்களையும் பகிர்ந்து கொண்டனர். முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளிக்கு 5 மின் விசிறிகள் வழங்கி, குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.