மேலும் செய்திகள்
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; விஸ்வநாதன் சாடல்
09-Oct-2024
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சிக்கு நாளை(19ம் தேதி) வருகை தரும் துணை முதல்வருக்கு, வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க மாவட்ட செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. வடக்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் மணிகண்ணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.மாநில மகளிரணி துணை செயலாளர் அங்கையற்கண்ணி, மாவட்ட துணை செயலாளர்கள் ஆறுமுகம், திருநாவுக்கரசு, பாப்பாத்தி நடராஜன் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ., பங்கேற்று பேசுகையில்; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய துணை முதல்வர் உதயநிதி நாளை(19ம் தேதி) மாலை 3 மணிக்கு கள்ளக்குறிச்சிக்கு வருகை தருகிறார். வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் மாடூர் டோல்கேட்டில் கட்சி நிர்வாகிகள் பெரும் திரளாக பங்கேற்று சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்றார்.கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் ஆறுமுகம், அரவிந்தன், அன்புமணிமாறன், ராஜவேல், வைத்தியநாதன், வசந்தவேல், முருகன், சந்திரசேகரன், அசோக்குமார், ஒன்றிய சேர்மன் சாந்தி இளங்கோவன், நகர செயலாளர்கள் துரைதாகப்பிள்ளை, டேனியல்ராஜ், இளைஞரணி நிர்வாகிகள் அருண்ராஜ், அருள், பாண்டியன், அலெக்சாண்டர், ஆஷிக் உட்பட பலர் பங்கேற்றனர்.
09-Oct-2024