உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம்

கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம்

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.கோவிலில் பகல் பத்து உற்சவ நிறைவுக்குப்பின் நேற்று ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதிகாலை சுப்ரபாத சேவை, விஸ்வரூப தரிசனம், தனுர் மாத பூஜைக்குப்பின் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து ஆண்டாளுக்கும், பெருமாளுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. பின், மாலை மாற்றுதல் சடங்கு நடந்தது. காப்பு கட்டும் நிகழ்ச்சிக்குப் பின், யாகம் நடத்தி ஆண்டாள் திருக்கல்யாணம் நடத்தப்பட்டது. வைபவங்களை தேசிக பட்டர் குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ