உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அங்கன்வாடி ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம்

அங்கன்வாடி ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம்

கள்ளக்குறிச்சி :கள்ளக்குறிச்சியில், அங்கன்வாடி ஊழியர்கள், 2வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி, கலெக்டர் அலுவலகம் எதிரே, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினரின் காத்திருப்பு போராட்டம், நேற்று முன்தினம் துவங்கியது. மாவட்ட செயலாளர் பிரேமா தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கொளஞ்சியம்மாள், துணைத்தலைவர் கலா, இணை செயலாளர் ஷீலாராணி முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அனந்தகிருஷ்ணன், மாநில துணை பொதுச்செயலாளர் மகாலிங்கம் பேசினர். ஒரு மாத காலத்திற்கு கோடை விடுமுறை வழங்குதல், காலி பணியிடங்களை நிரப்புதல் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தொடர்ந்து நிர்வாகிகள் கலைந்து செல்லாமல் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, 2, வது நாளாக நேற்றும் இரவு வரை போராட்டம் நீண்டது.இதில், சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் செந்தில், பொருளாளர் வீரசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அரசு ஊழியர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கும் வரை போராட்டம் நீடிக்கும் என, சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை